மலையாள நடிகர் மோகன்லால் இப்போது “மலைக்கோட்டை வாலிபன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். லிஜோ ஜோஸ் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனும், ஜீவாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர்கள் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்பே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் மோகன்லால் நடித்து இருந்தார். அதன்பின் மோகன்லால் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று விஜய்யுடன் இணைந்து மோகன்லால் நடித்த ஜில்லா படத்தில் நடிகர் ஜீவா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.