உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இந்து  ,முறைப்படி ஒரு கிராமத்தில் தவளைக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் உடைய சூழ தவளைகளுக்கு திருமணம் நடந்தது.

தவளைகளின் இந்த திருமண வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளைக்கு திருமணம் செய்வதால் மழை வரும் என்று இந்த கிராமவாசிகள் தொன்று தொட்டு நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.