மேலும் 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா…. தமிழக அரசு அறிவிப்பு… இதுல உங்க ஊர் இருக்கா…??

சங்கமம் – நம்ம ஊரு திருவிழா மேலும் 8 இடங்களில் நடத்தப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது. கோவை, தஞ்சை, வேலூர், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சியில் சங்கமம் நம்ம திருவிழா நடைபெறும். அக்டோபர், டிசம்பரில் நாட்டுப்புற கலை விழாக்களுடன் இந்த திருவிழா நடத்தப்படும். பொங்கலையொட்டி சென்னையில் நடந்தது போல் மேலும் 8 இடங்களில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது பறையாட்டம், கரகாட்டம் மற்றும் மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு வாய்ந்த உணவுகளும் உணவு திருவிழாவில் இடம் பெறுகிறது. அதோடு இலக்கியத் திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

Leave a Reply