கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 கோவை சென்றடையும்.

மறுமார்க்கமாக மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.