திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆன சேகுவாரா என்பவருக்கும் ஜெகதீசனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீசன் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேகுவரா உட்பட மூவர் அவரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீசன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.