இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போதிலிருந்தே தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி, அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் புதிய அதிரடி முடிவு அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கூட்டணி, தங்களது எதிர்காலத் திட்டங்களில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பதை அவரிடம் சூசகமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழந்த பிறகு, மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ரோஹித் சர்மா சோகத்துடன் அமர்ந்திருந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. அஜித் அகர்கர் மற்றும் காம்பீர் தரப்பில் இருந்து பிசிசிஐ-யின் இந்த முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரோஹித் அமைதியாகக் காணப்பட்டார்.

இந்தத் தகவல் விராட் கோலியையும் சென்றடைந்த நிலையில், அவரும் மிகவும் சோகமான முகத்துடன் ரோஹித் சர்மாவின் அருகில் அமர்ந்து மைதானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த உருக்கமான வீடியோ தற்சமயம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rohan Milke (@cric7xict)

“>

2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டுபுதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.