சமூக வலைத்தளங்கள் இன்று பலரது திறமைகளை வெளிக்காட்டும் தளமாக இருந்தாலும், சிலருக்கு அது ஆபத்தான விளையாட்டு மைதானமாக மாறி வருகிறது. லைக்ஸ்களுக்காகவும், வியூஸ்களுக்காகவும் எதையும் செய்யத் துணியும் இன்றைய இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே போகிறது.

அந்த வகையில், தற்போது இணையத்தைக் குலுக்கி வரும் ஒரு வினோத வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதற வைப்பதோடு, “இதெல்லாம் தேவையா தம்பி?” என்று நெட்டிசன்களை தலையிலடித்துக் கொள்ளவும் வைத்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

“>

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு வாலிபர் கையில் ஒரு தடியை வைத்துக்கொண்டு, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் மிக விசித்திரமான மற்றும் ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றைக் காட்டியுள்ளார். வெறும் சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், அந்த நபர் செய்யும் வித்தை பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திகைக்க வைக்கிறது.

“இந்த பிளாக்கரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்ற கேள்வியோடு பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் ஸ்டண்டைக் கண்ட இணையவாசிகள் கமெண்ட் பக்கத்தில் தங்களது கோபத்தையும், கிண்டல்களையும் வாரி இறைத்து வருகின்றனர்.

ஒரு பயனர், “அப்படி என்ன தம்பி உனக்கு கட்டாயம் வந்தது? இதெல்லாம் ஒரு பொழப்பா!” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நெட்டிசனோ, “இன்றைய தலைமுறையினர் ரீல்ஸ் போதைக்காக எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக மாறுகிறார்கள், உயிரையே பணையம் வைக்கிறார்கள்” என்று சாடியுள்ளார். இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைத் துச்சமாக நினைத்து இதுபோன்ற பேராபத்துகளில் சிக்குவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.