மின்சார வாரிய ஊழியர்கள் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.