தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் ஊக்கதொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியானது ஜூன் 17ஆம் தேதி நீலாங்கரையில் நடந்தது. இந்த நிலையில் கல்வி விருது விழா முடிந்த மறுநாளே லியோ படபடப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.

12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் நின்ற படிய சான்றிதழ் கொடுத்த நடிகர் விஜய் சோர்வை தள்ளி வைத்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்ததால் லியோ படக் குழுவினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.