தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பாஜக தலைமையிலான அரசு தன்னை கண்டு பயப்படுவதே காரணம் என தெரிவித்துள்ளார். மார்ச் 16ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 21ஆம் தேதி தன்னை சிறைக்கு அனுப்பினார்கள் என்று கூறினார். தான் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அவர்கள் நினைப்பதாகவும் தன்னை கண்டு பயப்படுவதாகவும் தெரிவித்தார்.