ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 1 முதல் எம் டி யு வாகனங்கள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சோளம், ராகி மற்றும் கம்பு போன்ற சிறு தானிய மாவு பாக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் 16 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு கிலோ முதல் மூன்று கிலோ வரை இந்த சிறுதானிய மாவு வகைகளை ரேஷன் அட்டைதாரர்கள் பெறலாம். அதற்கு ஏற்ப அரிசியின் அளவு குறைக்கப்படும். முதல் கட்டமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதன் பிறகு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது