தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியினுடைய தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர்தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை. எதாவது காவல் நிலையத்தில் மாமூல் வாங்கிக் கொண்டிருந்திருப்பார் என விமர்சித்துள்ளார்.