சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி போன்ற கிராமங்களில் அதிக பயணிகள் ஏறுவதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.  அதனால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் சென்று விடுகிறது. அதனால் மானாமதுரை – பரமக்குடி வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.