சென்னையில் சமீபகாலமாக சுற்றி திரியும் நாய்களால் சிறுவர் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்து விதிமுறைகளை வகுத்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்து வருகிறது. அதேபோல மாடு இரவு நேரங்களில் சாலை நடுவில் படுத்து கிடப்பதால் பல விபத்துக்கள் நடக்கிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது .

ஏற்கனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடைகளை வளர்ப்பவர்களை மாடுகளை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது/ அந்த வகையில் ஜூன் முதல் சென்னையில் மாட்டு  தொழுவங்களுக்கு லைசன்ஸ் கட்டாயம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெறலாம்.