தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா மின்சார எஸ்யூவி கார்களின் வாடிக்கையாளர்கள் சோதனை ஓட்டத்தை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகேந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காரில் அமர்ந்து காரின் புதிய அம்சங்களை பற்றி முதலமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டார்.

நாளை பொங்கல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று சோதனை ஓட்டத்தை தொடங்கிய இந்த காரின் பின்புறம் ஒளிவிளக்கில் ஹாப்பி பொங்கல் என்ற வாசகம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.