மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வகங்களுக்கும் அவ்வபோது அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, தமிழகத்தில் மட்டும் ஐந்து ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து உற்பத்தி நடவடிக்கைகள், மூலக்கூறு விகிதங்களில் மாறுபாடு இருந்தாலோ,  தர குறைபாடு இருந்தாலோ  அந்த ஆய்வகங்கள் மூலமாக அவை மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.