
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கடந்த 18ஆம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் காணாமல் போனார். இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவர் தன்னுடைய மனைவியை கொலை செய்த பின்னர் வீட்டின் குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி பின்னர் சில உடல் பாகங்களை குக்கரில் வைத்து சமைத்துள்ளார்.
பின்னர் எலும்புகளை அரைத்து அவற்றை வேக வைத்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களாக சதை மற்றும் எலும்புகளை வேகவைத்து பின்னர் ஏரிக்கரையோரம் சென்று அவற்றை வீசியுள்ளார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் குழந்தைகள் இருவரும் வெளியே சென்ற நிலையில் தன்னுடைய மனைவியை அவர் கொலை செய்துள்ளார். மேலும் குருமூர்த்தியை காவல்துறையினர் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.