மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபடும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.