மக்களவை தேர்தல்  நெருங்கி வரும் நிலையில் கோவையில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் இது நடக்கும் என்று உறுதியளித்தார்.

மேலும், குடியினால் எல்லோருக்கும் பிரச்னை ஏற்படும்; எனவே, கள் குடியுங்கள், டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், குடிக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என்றார்.