பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மணமக்கள் இருவரும் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு அதில் தீப்பொறியை வரவழைத்து மகிழ்கின்றனர். அதில் மணமகன் வானத்தை நோக்கி துப்பாக்கியை பிடித்திருந்த நிலையில் மணப்பெண் மணமகனை நோக்கி துப்பாக்கியை பிடித்து மரண பயத்தை காட்டி உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க