மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நோய்வாய் பட்டு நெருக்கடியான சமயத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்காக கொண்டுவரப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம்.

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவையானது வழங்கப்பட்டு வருகிறது. கேன்சர், நீரிழிவு , இருஇதய நோய்கள் உட்பட 26 பிரிவுகளை 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆயுஷ்மான் அட்டையை பெறுவதற்கு  nha.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.