இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக பிப்ரவரி மாதம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 1251 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 59 மருந்துகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதில் காய்ச்சல், சளி, செரிமான பிரச்சனைக்கான மருந்து, கால்சியம் சத்து, இரும்பு சத்துகளுக்கான மருந்துகள் அதிகம். இவை பெரும்பாலும் இமாச்சல், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இந்த மருந்துகளின் விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளமான cdsco.gov.in என்பதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.