கோயம்புத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவர் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு கீர்த்தனா பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கbசென்றார். இன்று காலை அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் உடனடியாக கீர்த்தனாவை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்தனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கீர்த்தனா சாப்பிட்ட பரோட்டா எங்கு தயாரிக்கப்பட்டது? பரோட்டா மாவில் ஏதாவது கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.