வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 23 அடியை கடந்ததால் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

ஏற்கனவே பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நண்பகல் 12 மணி முதல் 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.