ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசு நாடு உள்ளது. இங்கு தற்போது ஒரு அறியப்படாத காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இறந்தவர்கள் பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். கடந்த மாதம் 10-ம் தேதி முதல் இந்த நோய் பாதிப்பினால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் ரத்த சோகை போன்ற அறிகுறிகள் உள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோயினால் பெரும்பாலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்த நிலையில் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதோடு என்ன மாதிரியான நோய் என்பது தெரிய வராததால் மக்கள் சுத்தமாகவும் எச்சரிக்கையிடனும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.