தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவிலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று நெல்லைக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றும் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று காலை 10 மணி வரையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.