வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவையை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 35 கிலோவுக்கு அதிகம் எடை உள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல் தெரிவித்தால் அஞ்சல் துறை ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து பார்சலை எடுத்துச் சென்று குறிப்பிட்ட முகவரியில் சேர்க்கிறார்கள்.

இந்த பார்சல் சேவை மிக பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் கொண்டு சேர்க்கப்படுகின்றது. இதில் முதல் ஒரு கிலோமீட்டருக்கு ஜிஎஸ்டி வரி உட்பட ஆறு ரூபாயும் அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா நான்கு ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பார்சல் சேவைக்கு அஞ்சலக உதவி இயக்குனர், சென்னை மண்டல அஞ்சல் அலுவலகம், அண்ணா சாலை சென்னை என்ற முகவரியில் அல்லது 044-28594761, 28594762 என்ற தொலைபேசி எண்கள், 9444975512 என்ற கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.