தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி தனது அடுத்த நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று கூறினார். அதனைப் போலவே என்சிபி கட்சி பிரிவினை விவகாரம் தொடர்பாக டெல்லியில் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் பாஜகவுடன் கைகோர்ப்பவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் இல்லை என்றும் மக்களவை தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவாருடன் மோதல் ஏற்பட்டு அவரது மருமகன் அஜித் பவர் ஆளும் ஹின்டே தலைமையிலான சிவசேனா பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.