உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மூன்று புனித நதிகள் சந்திக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் வித்தியாசமான பல துறவிகள் கலந்து கொண்டு டிரெண்ட் ஆகி வரும் நிலையில் தற்போது அங்கு பாசி ஊசி மணிவிற்கும் மோனலிசா என்ற 16 வயது பெண் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

இந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட அவரை பின்தொடர்ந்து செல்பி எடுக்க பலரும் தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக மோனலிசாவை அவருடைய பெற்றோர் மீண்டும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் அந்த பெண் மேக்கப் எதுவும் இல்லாமல் இயற்கையான அழகுடன் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Devraj kharol (@voice_of_rajasthann)