கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரவுடி சூர்யாவை பிடிக்க முயற்சி செய்தபோது அவர் தப்பித்து ஓடினார் இதில் திடீரென கீழே விழுந்த அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பின் ரவுடி சூர்யா நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 1-ம் தேதி ரவுடி சூர்யா தனது மனைவியுடன் மருத்துவமனையில் வைத்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த போதும் இந்த சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து சரத்குமார், வேல்முருகன், கவியரசன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் அவரை சென்னை மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்ததோடு, இரவோடு இரவாக அவர் அங்கு மாற்றப்பட்டார்.