உக்ரைன் உடனான போரில் ரஷ்யா ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த ‘யோல்கா’ வார்ஃபேர் சிஸ்டத்தை களமிறக்கியுள்ளது. இது உக்ரைனின் ட்ரோன்களை வானிலேயே கண்டறிந்து வேட்டையாடும் திறன் கொண்டது. ஒரு போர்வீரர் எளிதாகக் கையாளக்கூடிய இந்த சிறிய ரக ஆயுதம், மிகக் குறைந்த செலவில் சுமார் 500 டாலர் எதிரிகளின் ட்ரோன்களைத் தகர்க்க வல்லது.
இதன் செயல்பாடு குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி, போர் வியூகத்தில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘யோல்கா’ சிஸ்டம் எதிரிகளின் ட்ரோன்களை அதன் சிக்னல்களைத் துண்டிப்பதன் மூலமும், நேரடியாக மோதி அழிப்பதன் மூலமும் செயலிழக்கச் செய்கிறது.
Russian (Chechen) special forces used a Yolka portable kinetic interceptor drone to shoot down a Ukrainian attack drone in the direction of Donetsk. pic.twitter.com/uILO9Z7XrC
— Deadly Weapons (@deadlyweapns) May 31, 2026
“>
இதனால் சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரம் வரை சென்று, மணிக்கு 200 முதல் 250 கி.மீ வேகத்தில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதம், உக்ரைனின் வான்வெளித் தாக்குதல்களுக்கு ரஷ்யா கண்டறிந்த ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பம் போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
