
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 24 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதில் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை இரண்டும் ஒரே நாளில் வரும் நிலையில் பொது விடுமுறை தினம் அப்படி பார்த்தால் 23 நாட்கள் தான். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 5 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் நவம்பர் மாதத்தில் ஒரு விடுமுறை கூட கிடையாது.
அதே சமயத்தில் அடுத்த வருடம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை. இந்நிலையில் அடுத்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை. இந்த வருடம் அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்து நிலையில் அடுத்த வருடம் 11 நாட்களுக்கு முன்பாக அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை அதுவும் திங்கள்கிழமை வருகிறது. மேலும் இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை. இந்த விடுமுறை குறித்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.