தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் சூட்டிங் இந்த வாரம் புனேவில் தொடங்க இருக்கிறது. மேலும் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.