தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு போன்றவைகள் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில் இன்றும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
அதன்பிறகு நேற்றே மகளிர் உரிமை தொகையும் பெண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகையுடன் சேர்த்து அரசாங்கம் இலவச வேஷ்டி சேலையையும் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. மேலும் இதன் காரணமாக ஒரே இடத்தில் வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பரிசு என இரண்டையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.