
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கேஜிஎஃப் நாயகன் யஷ் என்று தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருடைய 19-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி கேஜிஎப் 3 திரைப்படத்தின் சூட்டிங் 2025-ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த படம் 2026-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கர்நாடக விநியோக உரிமையை வாங்கிய கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் யஷ்ஷின் 19-வது திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. மேலும் கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பேல நிறுவனம் நடிகர் யஷ்ஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
#KGFChapter2 was a Gargantuan one, waiting for another Monster soon. To the man who shaped up the dream and took it beyond. Wishing you a very happy rocking birthday our Rocking Star @TheNameIsYash.
Have a rocking one and a phenomenal year ahead!#HBDRockingStarYash #HombaleFilms pic.twitter.com/A5ZR3FWcvH— Hombale Films (@hombalefilms) January 8, 2023