அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் சற்று முன் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனது. தற்போது பிப்ரவரி ஆறாம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.