சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் பள்ளி மாணவியை தாஸ் என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் பள்ளி மாணவியை கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்த தாஸ் என்பவருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.