பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்றை திரித்து இயக்கப்பட்டதாக கூறி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதோடு போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை அவமதிப்பு செய்யும் வகையில் மணிரத்தினம் படம் இயக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவைகள் ஆய்வு நடத்தி  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை கூடிய விரைவில் உயர்நீதிமன்றத்தில் வர இருக்கிறது.