புகைப் பொருட்களுக்கு தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டி உள்ளது.

மெக்சிகோ அரசு உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவியுள்ளது. அந்தவகையில் 2008 விதியின் படி  தற்போது அனைத்து பொது பகுதிகளிலும் முழுமையான தடையை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது பூங்காக்கள், பணியிடங்கள், உணவகங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக புகையிலை பொருட்களின் விளம்பரம் சந்தைப்படுத்துதல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இந்த புதிய மற்றும் கடுமையான விதிமுறைகள் வேப்ஸ் மற்றும் இ-சிகரட்களுக்கும் நடைமுறையில் இருக்கிறது என பி.பி.சி கூறியுள்ளது. மேலும் தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டி உள்ளது.