தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசில் இரண்டு 500 தாள்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில்லரையாக மாற்றி விநியோகம் செய்தால் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.