தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சென்னையில் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் உட்பட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 944501 44 50, 9445014436 போன்ற எண்களில் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார்.