பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்…. ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை தொடங்கிய மெட்டா நிறுவனம்….!!!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய சேவையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைத்தலை இன்ஃபுளூயன்சர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்த மெட்டா தற்போது சந்தா முறையில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மாதாந்திர ப்ளூ டிக் கட்டண சந்தாவாக 989 ரூபாய், மொபைல் ஆப் ஸ்டோர் பயன்பாடு என்றால் 1237 ரூபாய் என்றும் சந்தா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.