சென்னை திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அப்துல் சாஜல் என்ற 18 வயது இளைஞர் தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பதாக புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்கிடையில் ஒரு வருடத்திற்கு முன்பாக ஏற்பட்ட பைக் விபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருவொற்றியூரில் பெட்ரோல் பங்கின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் இவருடைய பைக் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.