வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆற்று நீர் செல்லும் பழைய வீடியோவை வெளியிட்டு தவறான தகவலை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வீடியோ கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாகும். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் குறித்த தவறான தகவலை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.