மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் 40 வயது தந்தை, தனது 21 வயது மகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நபர், தனது மனைவியையும் மகளையும் மிரட்டியுள்ளதுடன், இது குறித்து வெளிப்படையாகப் பேசினால் இருவரையும் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.

தாயும் மகளும் தாங்க முடியாத நிலையில், லவ்குஸ் நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காவல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் தனது மகளை தொடர்ந்து பலாத்காரம் செய்ததுடன், சிறுமி 17 வயதாக இருந்த போதே இந்த கொடுமைகள் தொடங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் வெளியானதை அடுத்து, குற்றவாளிக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் தலைமறைவாக உள்ளார். 40 வயது தந்தையை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளுக்கு நீதி கிடைக்கட்டும் என பொதுமக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.