பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை கொடுங்க…. சீமான் காட்டம்..!!!

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு  கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் ஜன்னத் அவர்களை அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

மேலும் ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

 

Leave a Reply