தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளுவார்.
இந்நிலையில் ZOO ஒன்றிற்கு சென்றுள்ள ஐஸ்வர்யா தத்தா அங்குள்ள குரங்குகளுடன் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 2 குரங்குகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கு முத்தம் கொடுக்கிறது. அதன் பிறகு ஒரு புலிக்குட்டியை தன்னுடைய மடியில் வைத்து அந்த புலிக்கு நடிகை ஐஸ்வர்யா புட்டி பால் கொடுக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram