தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர்.

இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற IPS அதிகாரி ரூபேஷ் குழந்தைகளுக்கு கல்வி படிப்பை வழங்க வேண்டும் என பல நடவடிக்கைளை மேற்கொண்டார். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமும், செங்கல்சூளை உரிமையாளரிடமும் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

அந்த வகையில் தற்போது Dhruva என்ற நவீன வசதிகளுடன்கூடிய பள்ளியை காவல் ஆணையர் திறந்து வைத்து உள்ளார். இந்த பள்ளியின் வகுப்பறை ஒவ்வொன்றிலும் LED தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது.