தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தீண்டாமை சம்பவம் குறித்து சட்டசபையில் பேசி வருகிறார். புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, கோவிலுக்குள் அனுமதிக்காதது மற்றும் இரட்டை குவளை முறை போன்ற தீண்டாமை முறைகள் நடைமுறையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் சிறப்பான முறையில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வேங்கை வயல் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். மருத்துவ குழுவினர் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருக்கிறார்கள். மேலும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.