தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் இறந்து விட்டதாக செய்திகள் பல பரவி வந்தன. இதனைத் தொடர்ந்து மறைந்த பீட்டர் பால் என் கணவர் இல்லை என்று கூறி அறிக்கை ஒன்றை நடிகை வனிதா வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மறைந்த பீட்டர் பாலை நான் ஒருபோதும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் பீட்டர் பாலின் மனைவியும் அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்து விட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.